ஜனவரியில் பேஸ்புக்கில் கிறுக்கியவை.-

Thursday 26 February 2015
1.

உன் கோபத்தை மொழி பெயர்க்க முயற்சித்ததில்
உன் கண்னத்து குழிக்குள் விழுந்துவிட்டேன்.

2.

நான் கிறுக்கி
மறைத்து வைத்த ஓவியத்திற்கு
அவள் நிறமூட்டுகிறாள்
அவள் கைரேகைபோல 
அழகாக இல்லை எனது ஓவியம் என்றேன்
முத்தம் வைக்கிறாள்
இன்னும் எதையாவதுகிறுக்கி
ஒழித்து வைக்க சொல்கிறது முத்தம்

3.

எனது வீட்டுத்தோட்டத்தில் பூக்கள்
பறிப்பதற்கு தயராகினேன் எல்லாமே முற்கள்
கண்கள் ஏமாந்ததை என்னி மனது வலிக்கிறது.

4.

நெடுங்கவிதை ஒன்றுக்காகய் பயணமானேன்
இடையில் எனது வ‌ழிகளை 
அவள் முடித்து விட்டாள்
தினமும் தோற்றுக்கொண்டே
குறைகளை நிரப்புவதற்கு முயற்சிக்கிறேன்


5.

தொட்டிலில் கொஞ்சம் - மீன்கள்
ரசிப்பதற்கு அழகான- பூக்கள்
கொஞ்சம் உயர்ந்து ஆட - ஊஞ்சல்
பறித்து சாப்பிட ஒரு புளியமரம் ஒரு மாமரம்
கூப்பிடும் தருணத்தில் அருகில் பிடித்தவர்கள்
அருகில் நீயும் நானும் தேனீர் பருக
கண்ட கணவு பலிக்குமா?


6.
சுதந்திரமாக பறக்கிறது தேசியக் கொடிகள்
வருடலான காற்று மழை புயல் எதுவானாலும்
சுதந்திரமாக இருக்கிறது
கொடிகளுக்கு இருக்கின்ற சுதந்திரம்
நமக்கு இருப்பதில்லை 
கொடிகளை ஏற்றுகின்றவர் அரசியலாக இருப்பதால்
அவைகளுக்கு மாத்திரம் சுதந்திரம்.

7.

கவிதைகள் எழுதுவதும் வாசிப்பதும்
காதலுக்கு என்றாகின்றது
காதல் இல்லாதவிடத்து 
கவிதைகள் இல்லாமல் போகலாம்
காதல் இல்லாத கவிதைகளை சேமிக்க வேண்டும்.


8.

யாரோ ஒருவர் எரித்துவிட்டு போனதை
யாராவது ஒருவர் அனைத்துவிடுகின்றனர்
மீண்டும் எரிக்கப்படாதிருக்க
இன்னொரு தோளில் சாய்ந்துகொள்வதில்லை


9.

பிரேத்தியேகமாக கவிதைகளுக்கென்று 
வார்த்‌தைகள் தயாரிக்கப்படுகின்றன
தனித்தனியே அவை ஒவ்வொன்றையும் வாசித்தாலும்
அவள் பெயரில் உள்ள மயக்கம் அவைகளுக்கில்லை.


10.

நீ ஒரு முறையேனும் வாசித்திருக்க மாட்டாய் 
எனது கைழுத்துக்குள் ஒழிந்திருக்கும் உனது பெயரை


11.



எனது காதலி!
இரு விரல்களுக்குள் நெருக்கமாகிறாள்
நான் உதடு வைக்கிறேன்
அவள் நொடியில் சாம்பளாகிறாள்!
எரிவது அவளும் என் இதயமும்தான்.








12.

தோட்டக்காரன் விடுவதாயில்லை
எனக்கென்று பூத்த பூவொன்று
என்னை பறிக்கச்சொல்கிறது
பூவுக்குத்தெரியாது
குழிக்கு செல்கிறாதா கூந்தலுக்கு செல்கிறாதா என்று
பூக்கள் பூரிப்போடு இருந்தால்தான் ‌அழகு
தோட்டக்காரனுக்கு
தனது தோட்டத்து பூ குறித்து
கரிசணையிருப்பதில் தவறேதுமில்லை
பூக்கள் ஓய்வெடுத்துக்கொள்ள
அனுமதிகேட்பதில் தவறேதுமில்லை
வண்டொன்று அமைதியாய் நிற்கிறது.

13.

வானம் சின்னதாகவும்,
நிலா தோற்றுப்போவதும்,
முத்தம்- எவ்வளவு பருகினாலும் தாகம் தீராததும்,
காதலில் சாத்திப்படுகின்றன.
காதலில் சாத்திப்படாத
எதையாவது ஒன்றை உனக்கு பரிசளித்து
வரலாற்றில் இடம் பிடிக்க
இதுவரைக்கும் முயற்சித்தும் முடியவில்லை.

14.
ஒரு நெடுந்துாரப்பயணத்தில்
ஐ ஹேட்யு என்று நீ அனுப்பிய 
குறுஞ்செய்தியை பார்த்துவிட்டு ஆடிப்போன எனக்கு
மறுகணத்தில் 
லுாசு சும்மா விளையாட்டுக்கு என்று 
நீ அனுப்புகிற குறுஞ்செய்திகள் ‌ஈடுசெய்தாலும்
என்ன ஒன் கூடவே கூட்டிட்டு போரீயா
என்கின்ற வார்த்தையைபோல சுவையாக இல்லை

15.








Read more ...

ஏன் எல்லா இடத்திலும் இவர் வந்து எழுதுகிறார்? இந்த வருடம் நாம் இழந்த இரண்டு ஊடகவியளாலர்கள்.

Wednesday 24 December 2014

unnamedசெய்திசேகரிப்பதற்காக தகவல் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு அவரை சந்திக்க சென்றேன். பொத்தவில் பஸ் நிலையத்தினூடக செல்லும் பாதை பற்றிய வரலாற்று குறிப்புக்ளை பெற்றுக்கொள்ளத்தான் அவரை நாடினேன் அவரிடமிருந்து ஏராளமான தகவல்கள் கிடைத்தன ஆனால் அவற்றை பிரசுரிக்கவேண்டாம் என்று சொல்லிவிட்டார் நமது பிரதேசத்திற்கு நல்லது நடக்வேண்டும் என்றால் சிலவற்றில் அமைதிகாப்பதுதான் சரி என்று சொல்லிவிட்டு, என்னிடம் மகனே என்று தோள்களை தட்டியபின்தான் நீங்கள் யாரு என்று என்னிடம் கேட்டார் நான் இன்னா ரு டைய மகன் என் று என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள, எங்கட பக்கத்துவீட்டுக்காரர்ட தம்பியா மகன் நான் பாரத்தஉடனே நினைத்ததேன் முகச்சாயல் அப்படியே இருக்கு என்று சென்னார்
.
ahamed leba

எல்லா நிகழ்வுகளிலும் இவரை கண்டிருக்கிறேன். இவர் ஏன் எல்லா இடத்திலும் வந்து எழுதுகிறார் என்று என் சகோதரரிடம் கேட்டேன் இவர்தான் இங்கு நடப்பவற்றை செய்திதாள்களுக்கு மற்றும் ரேடியோவிற்கு அனுப்புபவர் என்று சொன்னார்கள்.

அன்றிலிருந்து இவர் மீது ஒரு இனம்புரியாத மரியாதை அவரை போன்று செய்திகள் எழுதவேண்டும் என்ற ஆர்வமும் அப்போது ஏற்பட்டது.
அதன் பிறகு என்ன செய்கிறீர்கள் எதற்காக தகல் எல்லாம் என்று கேட்க, அதன் பின்னர் நான் பொத்துவில் நெற் எனும் இணையத்தளத்தை நடாத்துகிறேன் இதற்காகத்தான் பெற்றேன் என்று சொன்னேன் அடமகனே நீங்கதானா அது செய்றீங்க அந்த காலத்துல எவ்வளவு கஸ்டப்பட்டு ஒரு செய்தியை அனுப்பினோம் .
அவசரமான விடயங்களை தந்தியனுப்பினேன் அதன் பின்னரான காலத்தில் பெக்ஸ் அனுப்பினேன் நிக ழ்வுகளை கடிதங்களாக அனுப்பி பேப்பரில் வருவதற்காக கடுமையாக உழைத்தோம் இன்று கணனியில் அவசரமாக அனுப்பலாம் என்றாகிவிட்டது நாலு செய்திகளில் 40 பிழைகள் வருகின்றது மகன் நாம் பிடித்திருக்கும் இந்தபேனாவை நல்லதுக்காக மட்டுமே பயண்படுத்தவேண்டும் எல்லாரும் கூப்பிடுவார்கள் ஆனால் மனட்சாட்சியுடன் சமூக நலனை அக்கறையாகக்கொண்டு அவற்றை பரி சீலித்து ஊடகவியாளன் என்ற இடத்தில் இருந்துகொள்ளுங்க மகன் என்று என்னை ஊக்கப்படுத்திய இந்த மாமனிதர் ‌22.12.2014 மரணித்ததாக கேள்வியுற்றதும் சற்று அதிர்ந்துவிட்டேன் 40 வருடங்களாக ஊரின் ஒட்டுமொத்த நிகழ்வையும் ஊடகப்பணிக்காக அர்பணித்த இவரின் வாழ்ககை நமக்கெல்லாம் ஒருபாடம்தான்.
அவர் பற்றி
 நாற்பது வருடங்களாக லேக்ஹவுஸ் பொத்துவில் தினகரன் நிருபராக கடமையாற்றி வந்தவர்.
1947.03.25
 அகமது லெவ்வை போடி – கலந்தர் உம்மா தம்பதிகளின் புதல்வாரன இவர்
பொத்துவில் அரசினர் ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் முஸ்லிம் மத்திய
கல்லூரியில் உயர் கல்வியையும் பெற்றவர்.aha
விளையாட்டு நாடகம் சாரணியம் முதலுதவி என்பவற்றில் முதன்மைச் சான்றிதழ் பெற்றுள்ள இவர்
1970 -1980 வரை  YMMA அமைப்பிலும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவராகவும்
சமாதான நீதவானகவும் அம்பாரை பொத்துவில் பெரிய பள்ளி வாசல் நம்பிக்கையாளர் சபையிலும் பணி புரிந்துள்ளார்.
ஓய்வு பெற்ற இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போ பொறுப்பதிகாரியான இவர்
SLBC  பிரதேச செய்தியாளர் பொத்துவில்,
வீரகேசரியின் பொத்துவில்நிருபராகவும்,
விடிவெள்ளி பொத்துவில் நிருபராகவும் கடமையாற்றி வந்த நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக நோய்வாய்ப்பட்டு அம்பாரை பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் 22.12.2014 நள்ளிரவில் காலமானார்.

இப்படியான ஊடகப்பணியை தனியொரு ஊருக்காக ஒருவர் மேற்கொண்டது வரலாற்றில் பதியப்படவேண்டியது எமது சமூகத்தின் அடயாளங்களாக இருந்த மூத்த ஊடகவியளாலர்கள் இருவர் இந்த வருடம் மரணித்தமை கவலையளிக்கிறது.
KVSஇந்தவருடத்தின் ஆரம்பத்தில்த மிருகவைத்தியரும் சிறேஸ்ட ஊடகவியளாருமான KVS எனஅழைக்கப்படும் இப்றாஹிம் மரணித்தமை நமக்கான பாரிய இழப்பாகும்
இருவரையும் நினைவுகூரி ஒரு நல்ல ஊடகவியளாலனாக இருக்கபிராத்திக்கிறேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து இருவரையும் மேலான சுவர்க்கத்தில் சேர்ப்பானாக.  

Read more ...

நான் தவிக்கிறேனடி நீ சிரிக்கிறாயடி

Sunday 22 December 2013

என் துாக்கத்தை எறிந்து விட்டு 
தொட்டிலில் துாங்குகிறாயா?- நீ 
என் துாக்கத்தை எறிய முடிந்த -உனக்கு 
உன் ஞாபங்களையும் எறிந்து விட்டு செல்
இல்லையேல் எங்கேயாவது என்னை எரியச்செய்து விட்டு செல்

என்னிடம் உள்ள எல்லா வழிகளும்
உன் வருகைக்காவும் என் தொலைபேசியும் உன்
அழைப்பிற்காகவும் காத்திருக்கின்றன.

இன்று நேற்று ஏன் நாளையும் கூட
உன் வருகைக்காவே இறங்கி கிடக்கிறது.

எனக்குள்ளும் காதல் என்பதைவிட
எனக்குள்ளே நீதான் என்பதே நிகரான சரியாகும்.

பெண்களின் மனதை புரிந்து கொள்ள முடியாது
என்பதை விட
அவர்கள் ஒருபோதும்
ஆண்களை புரிந்து கொள்வதில்லை
என்பதாக அது மாற வேண்டும்.

Read more ...

அக்கரையில் நீ ஏன்னதான் செய்கிறாயோ

Sunday 22 December 2013
                                                      நீ என்னுடன் பேசாவிட்டாலும்
உள் மனது உன் நினைவுகளுடன்
பேசிக்கொண்டேதான் இருக்கிறது.

தருணத்தில் காரணமில்லாமல்
அழவைப்பதில் உனக்கு அலாதிப்பிரியம்.
ஏன் என்னை இற்றைக்கும் அழவைக்கிறாய்.

நீ பிரிப்பட்ட எல்லாவற்றுக்கும்
நான் தலையசைத்தவன் என்பதற்காகவா
நீ பிரிந்து செல்லும் போதிலும் தலையசைப்பேன்
என்று எண்னிக்கொண்டாயோ?

Read more ...