அக்கரையில் நீ ஏன்னதான் செய்கிறாயோ

Sunday, 22 December 2013
                                                      நீ என்னுடன் பேசாவிட்டாலும்
உள் மனது உன் நினைவுகளுடன்
பேசிக்கொண்டேதான் இருக்கிறது.

தருணத்தில் காரணமில்லாமல்
அழவைப்பதில் உனக்கு அலாதிப்பிரியம்.
ஏன் என்னை இற்றைக்கும் அழவைக்கிறாய்.

நீ பிரிப்பட்ட எல்லாவற்றுக்கும்
நான் தலையசைத்தவன் என்பதற்காகவா
நீ பிரிந்து செல்லும் போதிலும் தலையசைப்பேன்
என்று எண்னிக்கொண்டாயோ?


நீ என்னுடன் பிரிப்பட்டுள்ளாய் என்று
எனக்குள் நானே உன்னை நினைத்துக்கொண்டேன்
நீ பிரிந்து செல்ல ஆயத்தப்பட்டது தெரியாமல்.
உன் பிரியத்திற்கும் பிரிந்து செல்ல- நீ
ஆயத்தமானதற்கும் வித்தியாசம்
தேரியாத ஒரு முட்டாளாய் உன் வழிவந்தேன்

நீண்ட உரயாடலில் என்னை விட்டு செல்லகாரணம்
தேடியிருக்கிறாய் அக்கரையில் நீ
ஏன்னதான் செய்கிறாயோ
ஒருவேளை என்னை அழைப்பதற்கு
நான் என்னதான் செய்யவேண்டும்?

உன் சுதந்திரத்திற்காய் எல்லாவற்றையும்
நீ செய்து கொள்கிறாய்
என்னை கைதியாய் மாற்றிவிட்டு .

விருப்பங்களுடன் நான் வாழ்ந்ததே இல்லை
இப்போது உன்னை விரும்பியே வாழ்கிறேன்
ஏன்னை நீ சிந்திக்க மறந்தாலும்.
ஊன் சிந்தனைக்கே பிறந்தவன் போல
பித்தாடுகிறேன் நான்

என்னதான் செய்துகொள்ள
உன்னை மறக்க சொல்வதை விட
இறந்து செல்வதே சரியாயிருக்கும்
சின்ன சின்ன விடயங்களில் என்னுடன்
இருந்த நீ
இப்போது சாதிக்கையில்
என்னை சந்தோசப்படுத்த
ஏன் கூட வர மறுக்கிறாய்

இருப்பது ஒருவாழ்கை நீ
இல்லாத இந்த வாழ்கையை நான்
என்னதான் செய்ய?

கண்களும் காதுகளும்
உனது ஓசைக்காய் காத்திருக்கின்ற

No comments:

Post a Comment