என் துாக்கத்தை எறிந்து விட்டு
தொட்டிலில் துாங்குகிறாயா?- நீ
என் துாக்கத்தை எறிய முடிந்த -உனக்கு
உன் ஞாபங்களையும் எறிந்து விட்டு செல்
இல்லையேல் எங்கேயாவது என்னை எரியச்செய்து விட்டு செல்
என்னிடம் உள்ள எல்லா வழிகளும்
உன் வருகைக்காவும் என் தொலைபேசியும் உன்
அழைப்பிற்காகவும் காத்திருக்கின்றன.
இன்று நேற்று ஏன் நாளையும் கூட
உன் வருகைக்காவே இறங்கி கிடக்கிறது.
எனக்குள்ளும் காதல் என்பதைவிட
எனக்குள்ளே நீதான் என்பதே நிகரான சரியாகும்.
பெண்களின் மனதை புரிந்து கொள்ள முடியாது
என்பதை விட
அவர்கள் ஒருபோதும்
ஆண்களை புரிந்து கொள்வதில்லை
என்பதாக அது மாற வேண்டும்.
இந்த உலகமும் எப்படியும்
இப்படியேஇருக்கபோவதில்லை
இருந்தாலும் - நான் இப்படியேதான்
இருக்கப்போகிறேன் உன்னை அருகிலிருந்து
ரசித்துக்கொள்ள முடியாவிட்டாலும்
துாரத்திலிருந்தாவது பிராத்தனை செய்கிறேன்
நீ சந்தோசமாய் இருக்க.
உன்னிடம் யார் எது சொன்னாலும்
நம்பிக்கொள்கிறாய்
உனக்காகவே பிறந்த நான் சொல்வதை
மட்டும் நம்புவதை விட்டுவிட்டு.
நீ கொஞ்சமாவது யோசித்திருக்க வில்லை
அப்படி யோசித்திருந்தால்
இன்னேரம் என்னை அழைத்திருப்பாய்
சிலர் உன்னை விடுவதாயுமில்லை
குழந்தைத்தனமாய் நீ செய்தவற்றையும்
நீ காட்டிய கோபத்தையும் சில நொடிகலிலே
என்னிடம் சிரித்துக்கொள்வதில் காட்டிய தெளிவும்
இன்னும் கண்களுக்குள் சதா மின்னிக்கொண்டேதான் இருக்கின்றன
நீ என்னிடம் சொன்ன எல்லாவற்றையும்.
காதுகள் பொய் என்கின்றன . நீ மட்டும்
நிஜமானவள் என்பதால் உன் வழிகளில் வருகைக்காய்
தவமிருக்கிறேன்
No comments:
Post a Comment