ஏன் எல்லா இடத்திலும் இவர் வந்து எழுதுகிறார்? இந்த வருடம் நாம் இழந்த இரண்டு ஊடகவியளாலர்கள்.

Wednesday, 24 December 2014

unnamedசெய்திசேகரிப்பதற்காக தகவல் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு அவரை சந்திக்க சென்றேன். பொத்தவில் பஸ் நிலையத்தினூடக செல்லும் பாதை பற்றிய வரலாற்று குறிப்புக்ளை பெற்றுக்கொள்ளத்தான் அவரை நாடினேன் அவரிடமிருந்து ஏராளமான தகவல்கள் கிடைத்தன ஆனால் அவற்றை பிரசுரிக்கவேண்டாம் என்று சொல்லிவிட்டார் நமது பிரதேசத்திற்கு நல்லது நடக்வேண்டும் என்றால் சிலவற்றில் அமைதிகாப்பதுதான் சரி என்று சொல்லிவிட்டு, என்னிடம் மகனே என்று தோள்களை தட்டியபின்தான் நீங்கள் யாரு என்று என்னிடம் கேட்டார் நான் இன்னா ரு டைய மகன் என் று என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள, எங்கட பக்கத்துவீட்டுக்காரர்ட தம்பியா மகன் நான் பாரத்தஉடனே நினைத்ததேன் முகச்சாயல் அப்படியே இருக்கு என்று சென்னார்
.
ahamed leba

எல்லா நிகழ்வுகளிலும் இவரை கண்டிருக்கிறேன். இவர் ஏன் எல்லா இடத்திலும் வந்து எழுதுகிறார் என்று என் சகோதரரிடம் கேட்டேன் இவர்தான் இங்கு நடப்பவற்றை செய்திதாள்களுக்கு மற்றும் ரேடியோவிற்கு அனுப்புபவர் என்று சொன்னார்கள்.

அன்றிலிருந்து இவர் மீது ஒரு இனம்புரியாத மரியாதை அவரை போன்று செய்திகள் எழுதவேண்டும் என்ற ஆர்வமும் அப்போது ஏற்பட்டது.
அதன் பிறகு என்ன செய்கிறீர்கள் எதற்காக தகல் எல்லாம் என்று கேட்க, அதன் பின்னர் நான் பொத்துவில் நெற் எனும் இணையத்தளத்தை நடாத்துகிறேன் இதற்காகத்தான் பெற்றேன் என்று சொன்னேன் அடமகனே நீங்கதானா அது செய்றீங்க அந்த காலத்துல எவ்வளவு கஸ்டப்பட்டு ஒரு செய்தியை அனுப்பினோம் .
அவசரமான விடயங்களை தந்தியனுப்பினேன் அதன் பின்னரான காலத்தில் பெக்ஸ் அனுப்பினேன் நிக ழ்வுகளை கடிதங்களாக அனுப்பி பேப்பரில் வருவதற்காக கடுமையாக உழைத்தோம் இன்று கணனியில் அவசரமாக அனுப்பலாம் என்றாகிவிட்டது நாலு செய்திகளில் 40 பிழைகள் வருகின்றது மகன் நாம் பிடித்திருக்கும் இந்தபேனாவை நல்லதுக்காக மட்டுமே பயண்படுத்தவேண்டும் எல்லாரும் கூப்பிடுவார்கள் ஆனால் மனட்சாட்சியுடன் சமூக நலனை அக்கறையாகக்கொண்டு அவற்றை பரி சீலித்து ஊடகவியாளன் என்ற இடத்தில் இருந்துகொள்ளுங்க மகன் என்று என்னை ஊக்கப்படுத்திய இந்த மாமனிதர் ‌22.12.2014 மரணித்ததாக கேள்வியுற்றதும் சற்று அதிர்ந்துவிட்டேன் 40 வருடங்களாக ஊரின் ஒட்டுமொத்த நிகழ்வையும் ஊடகப்பணிக்காக அர்பணித்த இவரின் வாழ்ககை நமக்கெல்லாம் ஒருபாடம்தான்.
அவர் பற்றி
 நாற்பது வருடங்களாக லேக்ஹவுஸ் பொத்துவில் தினகரன் நிருபராக கடமையாற்றி வந்தவர்.
1947.03.25
 அகமது லெவ்வை போடி – கலந்தர் உம்மா தம்பதிகளின் புதல்வாரன இவர்
பொத்துவில் அரசினர் ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் முஸ்லிம் மத்திய
கல்லூரியில் உயர் கல்வியையும் பெற்றவர்.aha
விளையாட்டு நாடகம் சாரணியம் முதலுதவி என்பவற்றில் முதன்மைச் சான்றிதழ் பெற்றுள்ள இவர்
1970 -1980 வரை  YMMA அமைப்பிலும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவராகவும்
சமாதான நீதவானகவும் அம்பாரை பொத்துவில் பெரிய பள்ளி வாசல் நம்பிக்கையாளர் சபையிலும் பணி புரிந்துள்ளார்.
ஓய்வு பெற்ற இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போ பொறுப்பதிகாரியான இவர்
SLBC  பிரதேச செய்தியாளர் பொத்துவில்,
வீரகேசரியின் பொத்துவில்நிருபராகவும்,
விடிவெள்ளி பொத்துவில் நிருபராகவும் கடமையாற்றி வந்த நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக நோய்வாய்ப்பட்டு அம்பாரை பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் 22.12.2014 நள்ளிரவில் காலமானார்.

இப்படியான ஊடகப்பணியை தனியொரு ஊருக்காக ஒருவர் மேற்கொண்டது வரலாற்றில் பதியப்படவேண்டியது எமது சமூகத்தின் அடயாளங்களாக இருந்த மூத்த ஊடகவியளாலர்கள் இருவர் இந்த வருடம் மரணித்தமை கவலையளிக்கிறது.
KVSஇந்தவருடத்தின் ஆரம்பத்தில்த மிருகவைத்தியரும் சிறேஸ்ட ஊடகவியளாருமான KVS எனஅழைக்கப்படும் இப்றாஹிம் மரணித்தமை நமக்கான பாரிய இழப்பாகும்
இருவரையும் நினைவுகூரி ஒரு நல்ல ஊடகவியளாலனாக இருக்கபிராத்திக்கிறேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து இருவரையும் மேலான சுவர்க்கத்தில் சேர்ப்பானாக.  

No comments:

Post a Comment